13- மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல
அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஈகடார் நகர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் 5 வினாடிகளாக காத்திருந்தான் கே789456. கவச உடைகளுடன்.காலை இந்திய நேரம் 7.01.அவனது வாட்ச்சில் இந்திய நேரம் அதுதான் என்றது.இந்திய - சென்னை ஷட்டில் வரவேண்டிய நேரம். அவன் இந்த ஷட்டிலை பிடித்தால் தான்.9.02க்கு சென்னையை அடைய முடியும். சற்று இரைச்சலுடன் விண்வெளிகலம் வந்து நிற்க..பறக்கும் மனிதக்கூட்டத்துடன் தானும் பறந்து..அடித்து ,பிடித்துக் கொண்டு கலத்தினுள் சென்றான்.அதில் இருந்த வருகை மாணிட்டரில்..தனது மாதாந்திர பயணச்சீட்டை காண்பிக்க..அது சிறு விசில் ஒன்றை அடித்து..அவன் பயணத்தைக் குறித்துக்கொண்டது.அவன் பயணம் முடியும் முன் ..நாம் சற்று பின் நோக்கிச் செல்வோம். அவனது முன்னோர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்..இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள்.அங்கு சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..வளர..வளர.. மக்கள் வாழும் பகுதிகளெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டன.வயல்வெளிகளில் பயிர் விளைந்ததுப் போக..கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்திருந்தன.ஜனத்தொகை ஆயிரம் கோடியை எட்டிப்பிடித்தது.உலகில் அனைத்து நி...