Posts

Showing posts from August, 2020

23 - புனிதம்

'புனிதம்" இரவு மணி பன்னிரெண்டு.. கொண்டையா இன்னமும் வரவில்லை. திடீர் நகரில் தன் குடிசையிலிருந்து வெளியே வந்த குருவம்மா தெருவை பத்தாவதாக எட்டிப் பார்த்தாள் "கொண்டையா  வருகிறானா?" என்று. ஓரிரு நாய்களின் குரைப்பு சப்தத்தைத்  தவிர தெரு அனாதையாகக் கிடந்தது. பக்கத்துக் குடிசையில் கூட தினமும் லேட்டாய் வரும் பெயின்டர் அண்ணன் செல்வமும் வந்தாகி விட்டது. குருவம்மா..அந்த நேரம் செல்வத்தின் குடிசையைத் தட்டியிருக்கக் கூடாது.ஒருவேளை செல்வத்திற்கு கொண்டையா எங்கே போயிருக்கான்னு தெரிந்திருக்கக் கூடும் என எண் ணியதால்.அவன் வீட்டுக் கதவைத் தட்டினாள். செல்வத்துடன் ஒன்றியிருந்த அஞ்சலை பிரிந்து, அரைகுறையாக புடவையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்த அஞ்சலை..வாசலில் குருவம்மா வைப் பார்த்ததும் சீறினாள். "என்ன புள்ள..எந்த நேரத்துல ஒருத்தர் வூட்டுக்  கதவைத் தட்டறதுன்னு தெரிய வேண்டாம்..இப்படி நடு ராத்திரியிலா தட்டறது" அவள் இருந்த நிலையில்..உள்ளே என்ன நடந்திருக்கக் கூடும்...