Posts

13- மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல

அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஈகடார் நகர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் 5 வினாடிகளாக காத்திருந்தான் கே789456. கவச உடைகளுடன்.காலை இந்திய நேரம் 7.01.அவனது வாட்ச்சில் இந்திய நேரம் அதுதான் என்றது.இந்திய - சென்னை ஷட்டில் வரவேண்டிய நேரம். அவன் இந்த ஷட்டிலை பிடித்தால் தான்.9.02க்கு சென்னையை அடைய முடியும். சற்று இரைச்சலுடன் விண்வெளிகலம் வந்து நிற்க..பறக்கும் மனிதக்கூட்டத்துடன் தானும் பறந்து..அடித்து ,பிடித்துக் கொண்டு கலத்தினுள் சென்றான்.அதில் இருந்த வருகை மாணிட்டரில்..தனது மாதாந்திர பயணச்சீட்டை காண்பிக்க..அது சிறு விசில் ஒன்றை அடித்து..அவன் பயணத்தைக் குறித்துக்கொண்டது.அவன் பயணம் முடியும் முன் ..நாம் சற்று பின் நோக்கிச் செல்வோம். அவனது முன்னோர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்..இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள்.அங்கு சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..வளர..வளர.. மக்கள் வாழும் பகுதிகளெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டன.வயல்வெளிகளில் பயிர் விளைந்ததுப் போக..கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்திருந்தன.ஜனத்தொகை ஆயிரம் கோடியை எட்டிப்பிடித்தது.உலகில் அனைத்து நி...

12- நீயும் நானும் ஒன்னு...

முனுசாமி...முனுசாமி" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை தனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு"யாரு?" என்றார் "நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு " அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு ..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் வந்தவன் எழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார் அது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை தன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கம...

11 - மீட்டாத வீணை

"நிலவுப் பெண்" ஹாலில் தெற்கே தலைவைத்து தரையில் படுத்திருந்தாள் சாந்தி...... தப்பு....தப்பு..... தரையில், அவளது உடல் படுக்க வைக்கப் பட்டிருந்த்து.. தலைக்கு மேல் ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது ஆமாம்...ஒருவருடைய பெயர் அவரது உடலுக்கா..உயிருக்கா... உயிருக்குத்தான் இருக்க வேண்டும்....ஏனெனில்...உயிர் பிரிந்ததும் அது பாடி என்று சொல்லப்பட்டுவிடுகிறதே! பக்கத்து அறையில் அமர்ந்திருந்தபடியே ஜன்னல் வழியே சாந்தியின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவராமன்.  "அப்பா! எல்லாருக்கும் சொல்லியாச்சு.ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க.நாளைக்குக் கார்த்தாலே எடுத்துடலாம்னு வாத்தியார் சொல்லிட்டுப் போயிட்டார்.பெசன்ட்நகர்ல, அப்போதான் டயம் அலாட் பண்ணியிருக்காங்க" என்றான் அறையினுள் நுழைந்த சிவராமனின் மகன் ராமநாதன். இப்ப எல்லாம் செத்தவங்களை அனுப்பி வைக்கக்கூட சுடுகாட்டில முன்னமே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டியிருக்கு.பெரிய மனுஷங்க போயிட்டங்கன்னா ..உடனே நேரம் அலாட் ஆயிடுது.ஆனா அன்னிக்குன்னு சாதாரணமானவங்கப் போயிட்டா...அவங்களை அடுத்த நாள்தான் அனுப்பி வைக்க மு...

10 - கரை கடந்த காதல்

"பாரதி கண்ட பெண்" தயங்கித் தயங்கி..."அப்பா....உங்கக் கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் ரோகிணி. சிவராமனுக்கு மகளின் தயக்கத்தைப் பார்த்து ஆச்சரியம்.. சிறு வயதிலிருந்தே ரோகிணி, எந்த ஒரு விஷயத்திற்கும் தந்தையிடம் பேச தயங்கியதோ...பயந்ததோ கிடையாது.இன்னும் சொல்லப் போனால் மனதில் நினைப்பதை, அது சரியோ, தவறோ 'பட்' டெனப் பேசக் கூடியவள். பள்ளிப் படிப்பை முடித்த போதும் சரி...பொறியியல் கல்லூரியில் சேரும் போதும் சரி, படிப்பு முடிந்து கேம்பஸ் இன்டெர்வியூவில், பிரபல மின் பொருள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்த போதும் சரி....எல்லாமே அவள் விருப்பம்தான். "என்னடா! என்ன விஷயம்...எதுவானாலும் சொல்லு. அப்பா கிட்டே என்ன தயக்கம்?" என்றார் சிவராமன். "அது வந்து....ஒன்னுமில்ல அப்பா...நான் தினமும் வேலைக்குக் கிளம்பறச்ச..நம்ம தெரு முனையில் இருந்து ஒருத்தன் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஃபாலோ பண்றான்" சற்றே திடுக்கிட்டார் சிவராமன். சம உரிமை..எனப் பெண்கள், ஆண்களுக்கு நிகராக எல்லாப் பிரிவுகளிலும் பெருமளவு பெருகி வந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஜ...

9 - 9 - கொள்ளை

காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும். கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு.. நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன். 'மேல படியுங்க' என்றாள். 'சௌம்யா நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள...

8 - யாதெனின்..யாதெனின்

என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது. 'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர். நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.. நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின் படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது.. ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்.. 'வா..கிருஷ்ணா..' என்றார் ஆசிரியர். சென்றேன்.. 'உட்கார்..'என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர் கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..'படித்தாயா?' என்றார். ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும் படித்தேன்.. தமிழக வீரர் மரணம் என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்.. தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில் ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் க...

7 - எப்படி வாழ வேண்டும்

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்., குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்., நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்.. உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது.. அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்.. நாட்கள் உருண்டன... ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை.. அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'கு...