Posts

23 - புனிதம்

'புனிதம்" இரவு மணி பன்னிரெண்டு.. கொண்டையா இன்னமும் வரவில்லை. திடீர் நகரில் தன் குடிசையிலிருந்து வெளியே வந்த குருவம்மா தெருவை பத்தாவதாக எட்டிப் பார்த்தாள் "கொண்டையா  வருகிறானா?" என்று. ஓரிரு நாய்களின் குரைப்பு சப்தத்தைத்  தவிர தெரு அனாதையாகக் கிடந்தது. பக்கத்துக் குடிசையில் கூட தினமும் லேட்டாய் வரும் பெயின்டர் அண்ணன் செல்வமும் வந்தாகி விட்டது. குருவம்மா..அந்த நேரம் செல்வத்தின் குடிசையைத் தட்டியிருக்கக் கூடாது.ஒருவேளை செல்வத்திற்கு கொண்டையா எங்கே போயிருக்கான்னு தெரிந்திருக்கக் கூடும் என எண் ணியதால்.அவன் வீட்டுக் கதவைத் தட்டினாள். செல்வத்துடன் ஒன்றியிருந்த அஞ்சலை பிரிந்து, அரைகுறையாக புடவையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்த அஞ்சலை..வாசலில் குருவம்மா வைப் பார்த்ததும் சீறினாள். "என்ன புள்ள..எந்த நேரத்துல ஒருத்தர் வூட்டுக்  கதவைத் தட்டறதுன்னு தெரிய வேண்டாம்..இப்படி நடு ராத்திரியிலா தட்டறது" அவள் இருந்த நிலையில்..உள்ளே என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்த குருவம் மா, "இல்ல அக்கா..விடியல்ல போன மனுஷன் இன்னும் வரல்ல.அதான்..அண்ணனுக்கு எதாவது தெரியுமான்னு..."

21 -முறிந்த உறவு

கடந்த ஒரு வாரமாக நீலகண்டனுக்கு மனது சரியில்லை. அவளைப் பார்த்து சில மாதங்கள் ஆகியிருந்தன. அவரது சில நண்பர்கள் மூலம், அவளுக்குப் பிறந்திருக்கும் குழந்தை அச்சு அசலாக தன்னைப் போல இருப்பதை அறிந்தார்..அந்தக் கு ழந்தையைப் பார்த்துவிடத் துடித்தார், ஆனால் அவள் உறவை முறித்துக் கொண்டு விட்டா ரே..>. அவரது மனைவிக்கும் அச்செய்தி எட்டியிருந்தது."இதோ பாருங்க! நீங்க அங்கே போனீங்கன்னு தெரிஞ்சுது..எனக்குக் கெட்ட கோபம் வரும்.நம்ம உறவும் அறுந்துடும்" என்றாள். என்னவானாலும் பரவாயில்லை..தன் ஜாடையில் பிறந்துள்ள குழந்தையைப் பார்த்து விடவேண்டும்..என்று தீர்மானித்தவர், அன்று அலுவலகம் முடிந்ததும் நேரே அவள் வீட்டிற்கு சென்றார். கதவைத் தட்டியதும், கதவைத் திறந்த பெண்..முகத்தில் இவரைக் கண்டது ம் சந்தோஷம்..."எங்கே குழந்தை..எங்கே குழந்தை.." என்றார் ஆவலுடன். "எவ்வளவு நாள்தான்..வேற மதத்தைச் சேர்ந் தவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாள்னு பொண்ணை ஒதுக்க முடியும்" என்றபடியே..கையில் அவரது ஜாடையி ல் இருந்த..பேரனை ஏந்தியவாறு வந்தாள் அவரது மனைவி. (குமுதம்)

20 - அக்கினிக்குஞ்சு

அக்கினிக்குஞ்சு ------------------------- ஒரு நாள் இராமசாமி..அலுவலகம் செல்கையில் நண்பன் கதிரேசனை பேருந்தில் சந்தித்தான்..அவன் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகக் கூறினான்.. இராமசாமியை பார்க்க பரிதாபமாக இருந்தாலும்..அவன் மனதில் ஏதோ பாரம் இருப்பதைப் போல இருந்ததாலும்..'ஏன் இராமசாமி..என்னவாயிற்று உனக்கு?' என்றான் கதிரேசன். இராமசாமி தான் எழுத்தாளர் ஆன கதையையும்..புத்தகம் வெளிவந்ததையும்..பின் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துக் கொண்டான். கதிரேசனும்..'அடடா..ஆமாம்..துரை கூட என்கிட்ட சொன்னான்..உன் புனை பெயர் கூட ஏதோ அரிசிப்பொரி...' என இழுத்தான். இராமசாமிக்கு..கோபம் 'சுர்" ரென தலைக்கு ஏறியது.எழுத்தாளனுக்கான கர்வம் தலைதூக்கியது..'யாரைப் பார்த்து..அரிசிப்பொரி..என்கி றாய்..தீப்பொறி..' என்றான் .. பின்,முண்டாசுக் கவியின் கோபப் பார்வைகளை படங்களில் பார்த்திருக்கிறானே..அதே போன்று கண்களை உருட்டி ..மிரட்டி..'என் புத்தகத்தின் பெயர் ..அக்கினிக் குஞ்சும் ஆங்கோர் பொந்தும்..' ஆடிப்போன கதிரேசன்..'அப்படியா..கொ

18 -அழகான பிசாசு

மாலை ஐந்து மணியளவில், வாஷிங்டன் டல்லஸ்.விமான நிலையத்தில், கடார் ஏர்லைன்ஸ் கவுண்டரில் தன் பெற்றோருடன் நின்று, அவர்களுக்கான போர்டிங் டிக்கெட்டை  வாங்கிக் கொடுத்து.அனுப்பிவிட்டு வெளியே வந்தான் ரமேஷ். பார்க்கிங் பகுதிக்கு வந்தவன், தன் காரில் அமர்ந்தபடியே..அலைபேசிக்கு உயிரூட்டினான். எதிர்முனையில் தன் அலைபேசி அலற எடுத்த கீர்த்தனா, "ம்..சொல்லுடா.." என்றாள். "ஏர்போட்டிலிருந்து பேசறேன்.அப்பா, அம்மாவை பேக் பண்ணியாச்சு.நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துடு.நாம ஒண்ணா இருந்து நாலு மாசம் ஓடிப்போச்சு.' "ஐயாவுக்கு இப்பதான் என்னோட இருக்கணும்னு நெனப்பு வந்துதாக்கும்..உங்கப்பா, அம்மா வந்ததுல இருந்து நாம் ஒண்ணா வாழறது தெரியக்கூடாதுன்னுட்டு..என் ஃபிரண்ட் வீட்டுக்கு துரத்திட்டு..இப்ப பேச்சைப் பாரு" "சாரி..கீர்த்தனா. ஐ ஆம் ஹெல்ப்லெஸ் ..என்ன செய்யறது சொல்லு" என்றவன், "எப்ப வர?" என்றான். "டேய் முட்டாள் ..லிவிங் டு கெதர் கணவா..நான் ஏற்கனவே வந்துட்டேன்.வழிமேல் விழி வைத்து காத்துக்கிட்டு இருக்கேன்" ரமேஷ்..இளையராஜாவின் பாடல் ஒன்றை

15 - இருந்தால் நன்றாய் இருக்கும்

தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ். கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர் ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா' 'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன். பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்' ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான் ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக. 'சரி..உன

17 - சாமியின் தந்தை

தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.. சாமியைப் பார்த்து இன்ஸ்பெக்டர்..'இதோ பாருய்யா..இப்ப எல்லாம் அப்பா,அம்மாவைக் கவனிக்கலைன்னா கைது பண்ணிடுவோம்..நீதிமன்றத்தில உன் பேர்ல வழக்கு போடுவோம்..சிறையில் அடைப்போம்' என்றார். அதற்கு சாமி..'ஐயா..இதுநாள் வரை என் தந்தையை நான் காப்பாற்றி வந்தேன்..ஆனால்..அவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றை அவர் செய்யவில்லை..அதனால்..தந்தை விட்டுச் சென்ற பணியை மேற்கொள்ள வேண்டியதும் ஒரு மகனின் கடமை என்பதால்..அக்கடமையைச் செய்துக் கொண்டிருக்கிறேன்.என் தந்தை அவர் கடமையை ஏற்றுக் கொள்ளட்டும்..பின் நானும் என் தந்தையை காக்கும் பணியை குறைவில்லாமல் செய்கிறேன்' என்றான்.. 'இது என்னய்யா..புதுக்கதை' என்ற அருணாசலம்..'உன் தந்தை செய்ய மறந்த கடமை என்ன?' என்றார், இவ்வளவு நேரம் வாசலில் நின்றுக்கொண்டிருந்த் 85 வயது முதியவரை 'தாத்தா..உள்ள வாங்க'

14 -நில அபகரிப்பு

'நாளைக்கு வாசக்கால் வைக்கறோம்..விட்டு ஓனருங்கமுறையிலே நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு ஒம்பது மணிக்கு வந்துடுங்க' என்றான் மேஸ்திரி கண்ணாயிரம். 'என்ன..பர்வதம்..நாளைக்கு காலையிலே போகமுடியுமா' - ஈஸ்வரன் 'நல்லாயிருக்கு..நீங்க கேக்கறது..நம்ப எஞ்சிய காலத்தை இனிமே அங்கத்தான் கழிக்கப்போறோம்..நம்ம பிள்ளைங்க ..அப்பறம் பேரப்புள்ளைங்க எல்லாம் அங்கேதான் வாழப்போறாங்க..அதனாலே ஸாஸ்திரப்படி எல்லாம் செய்யணும். நாம கண்டிப்பா போகலாம்'என்றவள் ..மேஸ்திரியைப் பார்த்து'என்ன ..மேஸ்திரி நிலைப்படி வைக்கறதுக்கு முன்னாலே கீழே ஏதேதோ போடணும்னு சொல்வாங்களே..'என்றாள். 'அந்த கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்மா...இந்த கண்ணாயிரம் எல்லாத்தையும் ஒயிங்கா செஞ்சுடுவான். நீங்க தங்கக்காசு இருந்தா மட்டும் ஒன்னு கொடுங்க..அட..அரை கிராம் கூட போதும்..'பர்வதம் ஈஸ்வரனின் முகத்தைப்பார்க்க..'அட..இல்லேன்னாலும் பரவாயில்லைம்மா..நானே போட்டுக்கறேன்..என் வூடு மாதிரி நினைச்சுத்தாம்மா கட்டறேன்' மேஸ்திரி கிளம்ப... ஈஸ்வரனின் முன்னால் ஒரு கொசுவத்திச் சுருள். **** ***** ***** கடந்த சில மாதங்களாக