Posts

Showing posts from December, 2017

9 - 9 - கொள்ளை

காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும். கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு.. நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன். 'மேல படியுங்க' என்றாள். 'சௌம்யா நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள

8 - யாதெனின்..யாதெனின்

என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது. 'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர். நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.. நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின் படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது.. ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்.. 'வா..கிருஷ்ணா..' என்றார் ஆசிரியர். சென்றேன்.. 'உட்கார்..'என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர் கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..'படித்தாயா?' என்றார். ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும் படித்தேன்.. தமிழக வீரர் மரணம் என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்.. தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில் ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் க

7 - எப்படி வாழ வேண்டும்

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்., குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்., நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்.. உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது.. அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்.. நாட்கள் உருண்டன... ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை.. அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'கு

6 - அவரவர் பார்வையில்

அவள்:- நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது. எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள். ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம். அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று. அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம். இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன். ரவியின் தாயார்:- ----------------- என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த

5 - அப்பா

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம். அப்பா.... 'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம். நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன. 'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான். 'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?' 'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம் பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

4 - நோன்பு

சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது. பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார். கருமை நிறம் அதிகமா...அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில் கேசக்கற்றைகள்.சாந்தமே..உருவான..புன்முறுவலுடன் காணப்படும் அந்த முகம்.. இன்று சற்றே வாடிய ரோஜாப்போல...கண்மூடிக்கிடந்தது.மேல் உதடுகள் மீதும்..நெற்றிப்பரப்பிலும்..முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.தன் கையில் இருந்த கைகுட்டையால் அவற்றை ஒற்றி எடுத்தார். இப்பொது அவர் கண்களில் கண்ணீர் முத்துக்கள். அவள்..அவர் வீட்டில்..அவர் மனைவியாய் காலடி வைத்தது முதல்..நேற்று மாலை வரை பம்பரமாய் சுழன்றவள்.ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாத உயிர்... அவள் அப்படியிருந்ததால் தான், பிரகாசத்திற்கு வீட்டுக் கவலைகளை மறக்க முடிந்தது., அவள் அப்படியிருந்ததால் தான்..அவரால்..தன் இரு சகோதரிகளுக்கும்.மகளுக்கும் திருமணம் செய்துவைக்க முடிந்தது. தொகுதி எம்.எல்.ஏ., வரும்போது...அல்லக்கைகள் படை சூழ வருவதுபோல..

3 - எட்டு

தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை. அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம். அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது. கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும். அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள். ம்..அதெல்லாம்..அந்தக்காலம். இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிட

2 - அந்த கிரகமும்...மக்களும்

அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன் செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது. அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர். விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு தெரிவித்திருந்தனர். சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடலாயினர். பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார். நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்.. ம

1 - நான் என்ன படிக்கணும்

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா. 'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள் குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா. 'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை. அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள் படுக்கையில் இருந்தபடியே தங்கமணி. 'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான் படிக்கணும்'இது அம்மா. 'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க' என்றாள் பாட்டி. 'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'