Posts

Showing posts from January, 2018

10 - கரை கடந்த காதல்

"பாரதி கண்ட பெண்" தயங்கித் தயங்கி..."அப்பா....உங்கக் கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் ரோகிணி. சிவராமனுக்கு மகளின் தயக்கத்தைப் பார்த்து ஆச்சரியம்.. சிறு வயதிலிருந்தே ரோகிணி, எந்த ஒரு விஷயத்திற்கும் தந்தையிடம் பேச தயங்கியதோ...பயந்ததோ கிடையாது.இன்னும் சொல்லப் போனால் மனதில் நினைப்பதை, அது சரியோ, தவறோ 'பட்' டெனப் பேசக் கூடியவள். பள்ளிப் படிப்பை முடித்த போதும் சரி...பொறியியல் கல்லூரியில் சேரும் போதும் சரி, படிப்பு முடிந்து கேம்பஸ் இன்டெர்வியூவில், பிரபல மின் பொருள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்த போதும் சரி....எல்லாமே அவள் விருப்பம்தான். "என்னடா! என்ன விஷயம்...எதுவானாலும் சொல்லு. அப்பா கிட்டே என்ன தயக்கம்?" என்றார் சிவராமன். "அது வந்து....ஒன்னுமில்ல அப்பா...நான் தினமும் வேலைக்குக் கிளம்பறச்ச..நம்ம தெரு முனையில் இருந்து ஒருத்தன் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஃபாலோ பண்றான்" சற்றே திடுக்கிட்டார் சிவராமன். சம உரிமை..எனப் பெண்கள், ஆண்களுக்கு நிகராக எல்லாப் பிரிவுகளிலும் பெருமளவு பெருகி வந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஜ