Posts

Showing posts from April, 2018

13- மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல

அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஈகடார் நகர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் 5 வினாடிகளாக காத்திருந்தான் கே789456. கவச உடைகளுடன்.காலை இந்திய நேரம் 7.01.அவனது வாட்ச்சில் இந்திய நேரம் அதுதான் என்றது.இந்திய - சென்னை ஷட்டில் வரவேண்டிய நேரம். அவன் இந்த ஷட்டிலை பிடித்தால் தான்.9.02க்கு சென்னையை அடைய முடியும். சற்று இரைச்சலுடன் விண்வெளிகலம் வந்து நிற்க..பறக்கும் மனிதக்கூட்டத்துடன் தானும் பறந்து..அடித்து ,பிடித்துக் கொண்டு கலத்தினுள் சென்றான்.அதில் இருந்த வருகை மாணிட்டரில்..தனது மாதாந்திர பயணச்சீட்டை காண்பிக்க..அது சிறு விசில் ஒன்றை அடித்து..அவன் பயணத்தைக் குறித்துக்கொண்டது.அவன் பயணம் முடியும் முன் ..நாம் சற்று பின் நோக்கிச் செல்வோம். அவனது முன்னோர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்..இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள்.அங்கு சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..வளர..வளர.. மக்கள் வாழும் பகுதிகளெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டன.வயல்வெளிகளில் பயிர் விளைந்ததுப் போக..கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்திருந்தன.ஜனத்தொகை ஆயிரம் கோடியை எட்டிப்பிடித்தது.உலகில் அனைத்து நி

12- நீயும் நானும் ஒன்னு...

முனுசாமி...முனுசாமி" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை தனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு"யாரு?" என்றார் "நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு " அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு ..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் வந்தவன் எழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார் அது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை தன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கம