Posts

Showing posts from June, 2020

20 - அக்கினிக்குஞ்சு

அக்கினிக்குஞ்சு ------------------------- ஒரு நாள் இராமசாமி..அலுவலகம் செல்கையில் நண்பன் கதிரேசனை பேருந்தில் சந்தித்தான்..அவன் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகக் கூறினான்.. இராமசாமியை பார்க்க பரிதாபமாக இருந்தாலும்..அவன் மனதில் ஏதோ பாரம் இருப்பதைப் போல இருந்ததாலும்..'ஏன் இராமசாமி..என்னவாயிற்று உனக்கு?' என்றான் கதிரேசன். இராமசாமி தான் எழுத்தாளர் ஆன கதையையும்..புத்தகம் வெளிவந்ததையும்..பின் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துக் கொண்டான். கதிரேசனும்..'அடடா..ஆமாம்..துரை கூட என்கிட்ட சொன்னான்..உன் புனை பெயர் கூட ஏதோ அரிசிப்பொரி...' என இழுத்தான். இராமசாமிக்கு..கோபம் 'சுர்" ரென தலைக்கு ஏறியது.எழுத்தாளனுக்கான கர்வம் தலைதூக்கியது..'யாரைப் பார்த்து..அரிசிப்பொரி..என்கி றாய்..தீப்பொறி..' என்றான் .. பின்,முண்டாசுக் கவியின் கோபப் பார்வைகளை படங்களில் பார்த்திருக்கிறானே..அதே போன்று கண்களை உருட்டி ..மிரட்டி..'என் புத்தகத்தின் பெயர் ..அக்கினிக் குஞ்சும் ஆங்கோர் பொந்தும்..' ஆடிப்போன கதிரேசன்..'அப்படியா..கொ