Posts

Showing posts from March, 2018

11 - மீட்டாத வீணை

"நிலவுப் பெண்" ஹாலில் தெற்கே தலைவைத்து தரையில் படுத்திருந்தாள் சாந்தி...... தப்பு....தப்பு..... தரையில், அவளது உடல் படுக்க வைக்கப் பட்டிருந்த்து.. தலைக்கு மேல் ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது ஆமாம்...ஒருவருடைய பெயர் அவரது உடலுக்கா..உயிருக்கா... உயிருக்குத்தான் இருக்க வேண்டும்....ஏனெனில்...உயிர் பிரிந்ததும் அது பாடி என்று சொல்லப்பட்டுவிடுகிறதே! பக்கத்து அறையில் அமர்ந்திருந்தபடியே ஜன்னல் வழியே சாந்தியின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவராமன்.  "அப்பா! எல்லாருக்கும் சொல்லியாச்சு.ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க.நாளைக்குக் கார்த்தாலே எடுத்துடலாம்னு வாத்தியார் சொல்லிட்டுப் போயிட்டார்.பெசன்ட்நகர்ல, அப்போதான் டயம் அலாட் பண்ணியிருக்காங்க" என்றான் அறையினுள் நுழைந்த சிவராமனின் மகன் ராமநாதன். இப்ப எல்லாம் செத்தவங்களை அனுப்பி வைக்கக்கூட சுடுகாட்டில முன்னமே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டியிருக்கு.பெரிய மனுஷங்க போயிட்டங்கன்னா ..உடனே நேரம் அலாட் ஆயிடுது.ஆனா அன்னிக்குன்னு சாதாரணமானவங்கப் போயிட்டா...அவங்களை அடுத்த நாள்தான் அனுப்பி வைக்க மு